சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் பதிவு செயத பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவ.16ம்‌ தேதி மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளதால் அன்றைய தினம்,சபரிமலை ஐயப்பன்‌ கோவில்‌ நடை திறக்கப்படுகிறது.

இந்த நிலையில் கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.இதற்கு, ஆன்லைன்‌ மூலம்‌ பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே ஐயப்பன்‌ கோவிலில்‌ சுவாமி தரிசனம்‌ செய்ய அனுமதி வழங்கப்படும்‌ என்று அறிவித்தார்.

மேலும் நவம்பர் மாதம் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் ஆன்லைனில் அனுமதி பெறாத பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.புதிய அறிவிப்பால்‌ பக்தர்கள்‌ கடும்‌ அதிருப்தியில்‌ உள்ளனர்‌.