பழனி கோயிலில் ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கியது.

பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கியது.பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகளுக்காக 2 மாதங்கள் நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

பழனி முருகன் கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வர ரோப் கார், மின்இழுவை ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ரோப் கார் சேவையில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டது.இதன் காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து ரோப் காரில் பெட்டிகள், இரும்பு சக்கரங்கள், கம்பி வடம் உள்ளிட்டவை மாற்றப்பட்டு கடந்த இரு தினங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று, இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கியது.