தூத்துக்குடி மில்லர்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

தூத்துக்குடி மில்லர் புரத்தை சேர்ந்தவர் நல்ல பெருமாள் மகன் சின்ன கண்ணன் (60), ஷிப்பிங் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார்.
இவர் கடந்த 6ஆம் தேதி தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் சென்னையில் உள்ள உறவினரின் வீட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை 06.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று பீரோவின் லாக்கரை உடைந்து அதிலிருந்த 15 பவுன் நகை, 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்.