தூத்துக்குடி தனசேகரன்நகரில் வீட்டை பூட்டை உடைத்து 26 பவுன் நகை, ரூ.1லட்சம் கொள்ளை!

தூத்துக்குடி தனசேகரன் நகரில் வசித்து வருபவர் ஸ்டீபன் (46). தனியார் ஷிப்பிங் கம்பெனி மானேஜர். இவர் சம்பவத்தன்று டிச.,18ம் தேதி வெள்ளத்தின்போது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை வந்து பார்த்தபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 26 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.