குடியரசு தின விழா:தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றிய மேயர் ஜெகன்!

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 75வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 75வது குடியரசு தினவிழா மாநகர் நல அலுவலர் சுமதி தலைமையில் நடந்தது. விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.மேலும் மாநகராட்சி ஊழியர்களின் பணிகளை பாராட்டி சான்றிதழும் வாக்காளர் தின விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் பாலகிருஷ்ணன், துணைப் பொறியாளர் சரவணன், மண்டல ஆணையர்கள் தனசிங், ராமசந்திரன், சந்திரமோகன், சேகர், சுகாதார ஆய்வாள்கள் ஸ்டான்லி வேதமாணிக்கம், ராஜபாண்டி, அரிகனேஷ், கண்ணன், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டுராஜா, கலைச்செல்வி திலகராஜ், பாலகுருசாமி, நிர்மல்ராஜ் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

For Advertisment Contact Phone Number 24/7:9655550896