தூத்துக்குடியில் பலத்த மழை!

தூத்துக்குடியில் இன்று காலை முதலில் இருந்து பலத்த  மழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர், காயல்பட்டிணம், குலசேகரபட்டிணம், உடன்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது. இன்று காலை வரை தொடர்ந்து லேசான மற்றும் மிதமான கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று காலை தொடர்ந்து மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேவையான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

–விளம்பரம் தொடர்புக்கு CALLNOW-9655550896–

செய்திகள் தொடர்புக்கு: தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள்,போராட்டங்கள் மற்றும் பல்வேறு செய்திகள் குறித்து தகவல்களை செய்திகளாக வெளியிட WHATSAPP NUMBER :9655550896 தொடர்பு கொள்ளவும்….