தனியார் நிதி நிறுவன மேலாளரை தாக்கி வாகனத்தை சேதப்படுத்தியவர் கைது!

தூத்துக்குடி,திரேஸ்புரம் பகுதியில் வசூலுக்கு சென்ற தனியார் நிதி நிறுவன மேலாளரை தாக்கி வாகனத்தை சேதப்படுத்தியவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி திரேஸ்புரம் வடக்கு சுனாமி காலனியை சேர்ந்த சந்தியாராயப்பன் மகன் சாம்சன் (19) என்பவரது மனைவி, தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் வி.எம்.எஸ் நகரில் உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளார். இந்நிலையில் அவர் மேற்படி நிதிநிறுவனத்தில் நிலுவையில் இருந்த தொகையை கட்டாமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக தனியார் நிதிநிறுவனத்தின் மேலாளரான சந்தானம் மகன் மரியபாண்டி (37) என்பவர் கடந்த 03.11.2023 அன்று மேற்படி சாம்சனின் வீட்டிற்கு சென்று கடன் தொகை குறித்து கேட்டுள்ளார். அப்போது அங்கு வீட்டில் மதுபோதையில் இருந்த சாம்சன் நிதிநிறுவனத்தின் மேலாளரான மரியபாண்டியிடம் தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி, அவரது இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மரியபாண்டி அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மரிமஇருதயம் வழக்குபதிவு செய்து சாம்சானை கைது செய்தார்.