தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு சென்றபோது கைதி தப்பியோட்டம்!!

தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு சென்றபோது கைதி தப்பியோடினார்.

தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் செல்வ சதீஷ் (எ)சூப்பி. இவரை கொலை வழக்கில் தென்பாகம் போலீசார் கைது செய்தனர். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட அவர் இன்று கொலை வழக்கில் ஆஜர்படுத்த தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தபோது போலீசாரின் பிடியில் இருந்து கைதி சூசை தப்பினார். தப்பியோடிய அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.