காந்தி ஜெயந்தி: மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

காந்தி ஜெயந்தியையொட்டி,டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,காந்தியின் காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன
மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது, அது ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒற்றுமை, இரக்க உணர்வை மேலும் வளர்க்க தூண்டுகிறது. காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.