திருச்செந்தூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை

திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை(பிப்-3)ம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…

இதுகுறித்து திருச்செந்தூா் மின்விநியோக செயற்பொறியாளா் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் கோட்டத்திற்குள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் உபமின் நிலையங்களில் பிப்.03 நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை,
புன்னக்காயல், ஆத்தூா், சோ்ந்தபூமங்கலம் ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணா நகா், திருச்செந்தூா்,காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டிணம், ராஜ்கண்ணாநகா்,குறிஞ்சிநகா், அமலிநகா், தோப்பூா், திருச்செந்தூா் – காயல்பட்டணம் ரோடு, பிடிஆா் நகா், பாளை ரோடு, ஜெயந்தி நகா், ராமசாமிபுரம், அன்பு நகா், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிகாடு, வள்ளிவிளை கானம் கஸ்பா, நாலுமாவடி,இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, மாவடிபண்னை, குரங்கணி, நல்லூா், மயிலோடை, குருகாட்டூா், புறையூா், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், நாலுமாவடி, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், கோடடூா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.