தூத்துக்குடியில் இன்று (23-ஆம் தேதி) மின் நிறுத்தம் ரத்து!

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் அரசரடி துணை மின்நிலையம் மற்றும் அய்யனார்புரம் துணை மின்நிலையம் ஆகியவற்றில் இன்று (23.11.2023) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருந்தது. இந்த நிலையில் மழையின் காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்ட கீழஅரசரடி பட்டிணமருதூர் வால சமுத்திரம், புதூர் பாண்டியாபுரம், திரேஸ் புரம், டேவிஸ் புரம், ஜீவாநகர், சுனாமிநகர், பூபாலராயர் புரம், பட்டிணமருதூர், மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், ஆரோக்கியபுரம், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கிருஷ்ணராஜபுரம், முத்து கிருஷ்ண புரம், குருஸ்புரம், தருவைகுளம், டி.சவேரியர்புரம், மாதா நகர், ஆகிய பகுதிகளில் வழக்கம் போல் மின் விநியோகம் வழங்கப்படும் என்று தூத்துக்குடி நகர செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.