செங்கல்பட்டில் A+ ரவுடியை சுட்டு பிடித்தது போலீஸ்!

செங்கல்பட்டில் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ஏ ப்ளஸ் ரவுடியான பெரியபாளையத்தைச் சேர்ந்த தணியா என்ற தணிகாசலத்தை போலீசார் சுட்டு பிடித்தனர். இதில் படுகாயம் அடைந்த ரவுடி தணிகாசலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மீது கொலை கொள்ளை என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.