தூத்துக்குடி தருவை மைதானத்தில் உதவி ஆய்வாளர் பதவிக்கான உடற் தகுதி தேர்வு!

தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான உடற் தகுதி தேர்வு இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு கடந்த 26.08.2023 மற்றும் 27.08.2023 ஆகிய 2 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டத்தில் துறை சார்ந்த ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற 99 பேர் மற்றும் பொது ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற 371 பேர் என மொத்தம் 470 ஆண் விண்ணப்பதாரர்களுக்கு தூத்துக்குடி தருவை மைதானத்தில் இன்று (07.11.2023) உடற் தகுதி தேர்வு (Physical Measurement Test) நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தென்காசி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தன்ராஜ்கணேஷ், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தனுசியா மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர், காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் உடனிருந்தனர்.