செய்துங்கநல்லூர் பகுதியில் ஆற்று மணல் திருடியவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெபின் செல்வ பிரிட்டோ மற்றும் போலீசார் நேற்று (10.09.2023) ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது புளியங்குளம் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணபெருமாள் மகன் சுப்புராஜ் (23) என்பவர் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து சுப்புராஜை கைது செய்து, அவரிடமிருந்த 4 மூடை ஆற்று மணல் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.