தூத்துக்குடி மாநகரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு; பொதுமக்கள் அவதி

தூத்துக்குடி மாநகரில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகரில் பல பகுதிகளில் பகல் நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று எட்டையாபுரம் சாலை, ரஹ்மத்துல்லாபுரம், தெப்பக்குளம் தெரு,ரெங்கநாதபுரம் உட்பட ஒரு சில பகுதிகளில் நேற்று (திங்கள் கிழமை) மதியம் 2.30 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டது. சுமார் 2½ மணி நேரம் கழித்து தான் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

இதே போல் இன்று (செவ்வாய் கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டது.சுமார் 1½ மணி நேரம் கழித்து தான் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை 10.30 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரம் கழித்து தான் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

ஏற்கனவே தூத்துக்குடியில் வெயிலை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு இந்த திடீர் மின்வெட்டு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 30ம் தேதி தான் தூத்துக்குடி மாநகரில்  power shutdown செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு மின்வாரிய அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.