பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்கள் அறிவிப்பு.

டி20 ஒருநாள் டெஸ்ட் ஆகிய மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் ஆசாம் இருந்து வந்தார்.இந்நிலையில் நேற்று மாலை கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மேட்களில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பாபர் ஆசாம் அறிவித்திருந்தார்.

இதையடுத்து டி20 போட்டிகளுக்கு சஹீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் போட்டிகளுக்கு ஷான் மசூத்-ம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.எனினும், ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் யாரென்று அறிவிக்கப்படவில்லை.