கோவில்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை….

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனி பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி (65)குருசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் முத்துலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இன்று மாலையில் விசேஷ நிகழ்ச்சிக்கு முத்துலட்சுமி செல்வதாக இருந்தது. ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டின் பின்வாசலில் படிக்கட்டு அருகே கழுத்தில் வெட்டப்பட்டும் இரண்டு விரல்கள் வெட்டப்பட்டு முத்துலட்சுமி இறந்து கிடந்துள்ளார் .இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக கோவில்பட்டி கிழக்கு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த முத்துலட்சுமி இன் கழுத்தில் அணிந்திருந்த மூன்று நகை திருடப்பட்டு இருப்பதும் அவர் விரலில் அணிந்திருந்த மோதிரம் திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இது நகைக்காக இந்த கொலை நடைபெற்றதா ? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இந்த கொலை நடைபெற்றதா ? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.