தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை…!

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:-மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே புதிய வாராந்திர ரெயில் இயக்கப்பட உள்ளது. இதன்படி தூத்துக்குடியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இரவு 10.50 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் விரைவு ரெயில் (எண்: 16766) மறுநாள் காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

மறுமார்க்கமாக வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி விரைவு ரெயில் (எண்: 16765) மறுநாள் காலை 4.20 மணிக்கு தூத்துக்குடி ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயிலானது, கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. மேலும் எந்தத் தேதியில் இருந்து இந்த புதிய ரெயில் சேவை தொடங்கப்படும் எனக் குறிப்பிடப்படவில்லை.