ஏரல் கே.சின்னத்துரை அன்கோ நிறுவனத்திற்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ரூ.1கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் ஏரல் பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ள சின்னத்துரை அன் கோ ஜவுளி கடை தரை தளம் முற்றிலும் மூழ்கியது. இதனால் அந்நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏரல் கே.சின்னத்துரை அன்கோ நிறுவனத்திற்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் நிறுவனம் சார்பில் முதற்கட்டமாக ரூ.1கோடி இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, நிறுவனத்தின் பங்குதாரரான அரி ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், மாவட்ட தொழில் மைய மேலாளர் சொர்னலதா, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன முதன்மை மேலாளர் பால்சிங், மண்டல மேலாளர் பிரபாகரன், கோட்ட மேலாளர் காசிராஜன், அலுவலக பொறுப்பாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

• தூத்துக்குடி டைம்ஸ் • வாட்ஸ்அப்!
 https://chat.whatsapp.com/FWHq80qx4i9GGNt1m3ORk9

விளம்பரம் தொடர்புக்கு:9789625946-செய்தி தொடர்புக்கு:9655550896