தூத்துக்குடியில் புதிய மேம்பாலம் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

தூத்துக்குடியில் 5வது ரயில்வே கேட் மற்றும் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி பகுதி சபா உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம், தூத்துக்குடி கீதா ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளில் 60 செயல்படுத்தப்பட்ட பணிகள், செயல்படுத்தப்பட உள்ள பணிகள், தேர்தல் கள நிலவரம் ஆகியவை குறித்து ஆலோசனை மேயர் நடத்தினார்.

அப்போது, தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ள நிவாரண பணிகளை சிறப்பாக மேற்கொண்ட மேயருக்கு சபா உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர். பின்னர் மேயர் பேசும்போது, தூத்துக்குடி விஎம்எஸ் நகரில் 5வது ரயில்வே கேட் மற்றும் மேம்பாலம் அமைய உள்ளது. இதன் மூலம் சங்கரப்பேரி வழியாக மதுரை பைபாஸ் ரோட்டிற்கு பொதுமக்கள் விரைவாக செல்லலாம்.

இதற்கான அனுமதியை கனிமொழி எம்.பி., பெற்றுத் தருவார். மாநகராட்சி நிதி மூலம் இப்பணிகள் நடைபெறும். தூத்துக்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது பிரசவங்கள் நடைபெற்று வருகிறது. இதற்காக கூடுதல் வசதியாக அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப்பட உள்ளது. மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்.

எளிய முறையில் கடன் பெற உடனே அழைக்கவும்…

வருங்காலங்களில் எவ்வளவு மழை பெய்தாலும், தூத்துக்குடியில் மழை நீர் தேங்காது. தூத்துக்குடி மாநகராட்சி ஒளிரும் மாநகராட்சியாக மாற்ற தேவைப்படும் இடங்களில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. அனுமதிக்கப்பட்ட சாலைப்பணிகள் உடனடியாக செயல்படுத்தப்படும். மற்ற பணிகள் மே மாதத்தில் தொடங்கும். மாநகராட்சியின் சாதனைகளை பகுதி சபா உறுப்பினர்கள் மக்களிடம் எடுத்துக்கூறி, தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுத்தர வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் பகுதி சபா உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.