நெல்லை அழகு நிலைய பெண் கொலை:2வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல் குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகள் சந்தியா (18). இவர் நெல்லை டவுன் கீழ ரத வீதியில் உள்ள அழகு சாதன பொருட்கள் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் சந்தியா கடையின் அருகில் உள்ள குடோனுக்கு பொருட்கள் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது குடோனில் ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞரால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி நேற்று இரவு ராஜேஷ் கண்ணன் கைது செய்யப்பட்டு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதால் அவர் கூர் நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக சந்தியாவின் சொந்த ஊரான திருப்பணி கரிசல்குளத்தில் அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு சந்தியா கொலைக்கு நீதி வேண்டும். அவருக்கு நிதி உதவி ஒரு கோடி ரூபாய் வேண்டுமென கோரிக்கை வைத்து தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறை துணை ஆணையர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.