முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு

தூத்துக்குடி கீழுர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில், சின்னக்கண்ணுபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் ரயிலின் பி3 ஏசி பெட்டி மீது கல் வீசி விட்டு தப்பியோடி விட்டார். இதில் பெட்டியின் கண்ணாடி உடைந்ததால் அதில் இருந்த பயணிகள் அலறினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளா் கண்ணன் வழக்கு பதிவு செய்து ரயில் மீது கற்கள் வீசிய மா்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எளிய முறையில் உடனடியாக கடன் வசதி வழங்கப்படும்….