தூத்துக்குடி:ரேஷன் கடை பெண் ஊழியர் வெட்டிக் கொலை!

விளாத்திகுளம் அருகே குடும்பத் தகராறில் ரேஷன் கடை பெண் ஊழியர் அம்பிகாபதியை வெட்டிக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகி்னறனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன்.இவர் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி அம்பிகாபதி. ராமச்சந்திராபுரம் கிராமத்தில் ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார்.
இந்த தமப்தியினர்க்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் லட்சுமணன் அம்பிகாபதியை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப் பதிந்து தப்பியடோடிய லட்சுமணனை தேடி வருகின்றனர்.