தூத்துக்குடியில் தலை துண்டித்து ஒருவர் கொலை:2 பேர் கைது

தூத்துக்குடி மையவாடி பகுதியில் தலை துண்டித்து ஒருவரை கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி டி.எம்.பி. காலனியை சேர்ந்தவர் மாரியப்பன்(43), இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அண்ணாநகர் சலவை காலனியில் சப்பாணிமுத்து என்பவரை தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் சப்பாணிமுத்துவை மையவாடி பகுதியில் வைத்து ஒரு கும்பல் தலையை துண்டித்து கொலை செய்து, துண்டித்த தலையை ஏற்கனவே சப்பானிமுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சலவை கூடத்தில் உள்ள விநாயகர் கோயில் முன்பு போட்டுவிட்டு சென்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய கொலை செய்யப்பட்ட சப்பானி முத்துவின் அக்கா மகன் தூத்துக்குடி பி அன் டி காலனி சேர்ந்த மாடசாமி மகன் சுப்புராஜ் (25), மற்றும் அவரது நண்பர் அண்ணா நகர் 1வது தெருவை சேர்ந்த கணேசன் மகன் வினோத் (22) ஆகிய 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை சம்பவத்துக்கு பழிக்கு பழியாக தலை துண்டித்து கொலை கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற ✅தூத்துக்குடி டைம்ஸ்✅வாட்ஸ் அப் செய்தி சேவையில் இணைந்திருங்கள்;

தூத்துக்குடி டைம்ஸ் channel on WhatsApp:  https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46