இறகுப்பந்து விளையாட்டரங்கம்,உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைத்த கனிமொழி எம்பி.,

கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், இன்று மாநகராட்சிக்குட்பட்ட கிரேட் காட்டன், அசோக் நகர், லையன்ஸ் டவுண் புல்தோட்டம் மற்றும் நந்தகோபாலபுரம் ஆகிய 4 இடங்களில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் ஆகியோர் முன்னிலையில், விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.