டெங்கு காய்ச்சல் பரவாமல் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உலக வெறிநோய் தடுப்பு தின விழிப்புணர்வு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (28.09.2023) துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்..
காச நோய் குறித்து பரிசோதனை செய்வதற்காக மேம்படுத்தப்பட்ட பரிசோதனை மையமானது தமிழகத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட 424 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த மையம் தொடங்கப்படும்.
தமிழகத்தில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நேற்று வரை 4454 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். அதில் தற்போது 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்று பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவர்கள் மருந்தாளுனர்கள் காலிப் பணியிடங்கள் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விரைவில் நிரப்பப்படும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் நோயைத் தடுப்பு மருத்துவ துறை இயக்குனர் டாக்டர் செல்வநாயகம், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி ஊரக வளர்ச்சி முகமை பதவிய ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் , ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா,தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன், காசநோய் மருத்துவ பணிகள் சுகாதார இயக்குனர் சுந்தரலிங்கம், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.