கோவில்பட்டியில் கூடுதல் பேருந்து சேவையை துவக்கி வைத்த அமைச்சர் கீதாஜீவன்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இன்று கூடுதல் பேருந்து சேவையை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி, ஒன்றிய சேர்மன் கஸ்தூரி, ஒன்றிய கழகச் செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.