மின்னல் தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4லட்சம் நிதியை வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி; விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர் ஊராட்சி ஒன்றியம் கே.துரைச்சாமி புரத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் ராமமூர்த்தி என்ற செல்வராஜ் என்பவரது மனைவி அமுத மலர் நேற்று முன் தினம் மின்னல் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்து பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ராமமூர்த்தி என்ற செல்வராஜிடம் இன்று வழங்கி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின் போது மார்க்கண்டேயன் எம்எல்ஏ, விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜோன் கிறிஸ்டிபாய், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிக்குமார், வெங்கடாசலம், புதூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா, மற்றும் கருணா, மணி, அல்பர்ட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.