தூத்துக்குடியில் பரபரப்பு…பால் வியாபாரி வெட்டிக் கொலை!

தூத்துக்குடி பண்டாரம்பட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் ஆத்திமுத்து மகன் நந்தகுமார் (30), பால் வியாபாரம் செய்து வருகிறார்.இவர் சம்பவத்தன்று இன்று காலை 11 மணிக்கு பால் வியாபாரத்தை முடித்துவிட்டு தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மீள விட்டான் ரோடு, பண்டாரம்பட்டி விலக்கு ரோட்டில் வைத்து பால் வியாபாரி நந்தகுமாரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,நந்தகுமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை நடந்த சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், ரூரல் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் பட்ட பகலில் பால் வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.