தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிக்கு 100 ஸ்மார்ட் பெஞ்ச்களை மேயர் வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் சிவந்தாகுளம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளுக்கு தேவையான100 ஸ்மார்ட் பெஞ்ச்களை முதற்கட்டமாக அந்த பள்ளிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். இதனால் பள்ளிகளின் தரமும் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை மேலும் அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும் வருங்காலங்களில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர துணை பொறியாளர் சரவணன், பகுதி கழகச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் , பகுதி கழக செயலாளர் ரவீந்திரன் , மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் , வட்ட கழக செயலாளர் பொன்ராஜ் , மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற ✅தூத்துக்குடி டைம்ஸ்✅வாட்ஸ் அப் செய்தி சேவையில் இணைந்திருங்கள்;

தூத்துக்குடி டைம்ஸ் channel on WhatsApp:  https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46