தூத்துக்குடி நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட, புல்தோட்டம் பகுதியில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது நகர்ப்புற நலவாழ்வு மையத்தை சுற்றிலும் சுற்று சுவர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, அதனை ஆய்வு செய்தார். தொடர்ந்து அதன் அருகில் புதிதாக அமைய இருக்கும் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் , சுகாதார அலுவலர் ராஜசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.