தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதிகளில் மேயர் ஜெகன் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி,பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் அறிவுறுத்துதலின்படி,அலங்கார தட்டு, ராஜபாளையம், பாலதண்டாயுத நகர் மற்றும் மாதா நகராகிய பகுதிகளில் நேற்று இரவு மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி பின்புறம் முதல் ஓடை வரை புதிய வடிகால் பாதை அமைக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிந்து விடும் என்பதையும் இந்த பகுதிகளானது மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அருகில் இருப்பதால் அந்த பகுதிகளுக்கு அருகில் உள்ள மாநகர பகுதிகளுக்குள்ளே வரும் மழை வெள்ள நீரும் தடுக்கபடும் என்று அவர் கூறினார்.