தூத்துக்குடி;கனமழையினால் பாதிப்படைந்த வாகனங்களுக்கு இழப்பீடு வழங்கும் முகாமை மேயர் ஜெகன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கனமழையினால் பாதிப்படைந்த இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய் 1500 முதல் 3000 வரையிலும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 10000 முதல் 20000 வரை உடனடி தீர்வாக நிதியுதவி வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.தூத்துக்குடி அண்ணா நகரின் பிரதான சாலையில் உள்ள ஈகவிட்டாஸ் பேங்க் அருகில் நடைபெறும் இந்த முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

இதில் முழுவதும் பாதிப்படைந்த வாகனங்களுக்கும், வீடுகள் மற்றும் பொருள் வைக்கும் கிடங்குகளுக்கு காப்பீடு செய்திருந்தால் அதற்கும் இழப்பிற்கு ஏற்றார் போல் தீர்வு காணப்படுகின்றது. இந்த முகாமில் தீ நியு இந்த அஷ்யுரஸ், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி, மற்றும் இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி கலந்து கொண்டுள்ளனர்.