தூத்துக்குடி:திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மேயர் ஜெகன்!

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக முத்துநகர் கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் 2 வது முறையாக போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளரும், வேட்பாளருமான கனிமொழி கருணாநிதிஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களை சந்தித்து மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.