திருச்செந்தூரில் மார்கழி பஜனை கொண்டாட்டம்!

திருச்செந்தூரில் கல்யாண கிருஷ்ணன் கோவிலில் பஜனை வெகுவிமரிசையாக நடைபெற்றது.மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும்.

இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் 30 நாட்களும் கோவில்களில் திருப்பள்ளி எழுச்சி தீபாரதனை நடைபெறும். அந்த வகையில் திருச்செந்தூரில் கல்யாண கிருஷ்ணன் கோவிலில் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து கோவிலில் திருப்பள்ளி எழுச்சி தீபாரதனை நடைபெற்றது. இந்த பஜனையிலும் திருப்பள்ளி எழுச்சியிலும் கொட்டும் மழையை பொருப்படுத்தது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.