குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்கிறார்:அமைச்சர் கீதாஜீவன்!

தூத்துக்குடி நகராட்சி நகர்மன்ற தலைவராக குரூஸ்பர்னாந்து பணியாற்றிய காலத்தில் வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடிக்கு குடிதண்ணீர் முதலில் கொண்டு வந்த அவரது பெயரில் பழைய மாநகராட்சி கட்டிடம் இயங்கி வருகிறது. இந்நிலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று சமுதாய சங்கங்கள் சார்பில் அரசுக்கும் அமைச்சருக்கும் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி திருநெல்வேலி நெடுஞ்சாலை பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் பூங்கா அருகில் அவரது சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்ட இடம் ஓதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியினை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்:”குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அமைக்கும் பணி விரைவில் நிறைவுபெற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் காணொலி வாயிலாக மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.