தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி!

தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் செந்தில்குமார் (45), கொத்தனார். இவர் சம்பவத்தன்று நேற்று தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள போல் பேட்டையில் ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது கட்டிங் மிஷினில் பலகையை வெட்டும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.