பணிப்பெண் துன்புறுத்தல் விவகாரம்.! திமுக எம்எல்ஏ மகன், மருமகளை கைது செய்த தனிப்படை.!

பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் வீட்டில் பணிப்பெண்ணாக விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையை சேர்ந்த சிறுமி வீட்டு வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.

Advertisment: தரமான பாராசூட் விற்பனைக்கு உள்ளது…

இந்த நிலையில் அந்த சிறுமி வீட்டு வேலைக்கு சேர்ந்த தன்னை, மெர்லினா, ஆண்டோ ஆகியோர் அடித்து கொடுமைபடுத்தியதாகவும், சாதி பெயர் சொல்லி திட்டியதாகவும், சரியாக வேலை செய்யவிலை என கூறி சூடு வைத்ததாகவும் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வீடியோ மூலம் தெரிவித்து இருந்தார். இது குறித்து நீலாங்கரை மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகமாக இருவரும் தலைமறைவானர். இதையடுத்து நீலாங்கரை காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்தனர். இந்நிலையில், ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினாவை தனிப்படை போலீசார் இன்று ஆந்திராவில் கைது செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது .