தூத்துக்குடியில் லாரி திருட்டு;ஒருவர் கைது

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சரள் மணல் ஏற்றி வந்த லாரி விமான நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இது குறித்து ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் வன்னிராஜ் மகன் ராஜா கணேஷ் (30) என்பவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

அதில் முள்ளக்காடு நேரசமணி நகரைச் சேர்ந்த தொம்மை மகன் லோகேஷ் (27) என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் ஜெயக்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.