“வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிய அனுமதி இல்லை;பார் கவுன்சில் அறிவிப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

நீதிமன்றங்களுக்கு வழக்கு விசாரணைக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் எந்த ஒரு வழக்கறிஞரும் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது எனவும், வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து தமிழக பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

The Thoothukudi Times WhatsApp Channel: செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள:

Link: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29