கர்ப்பிணி பெண்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.5,000 நிதியுதவி பற்றி தெரியுமா..?

பெண்களுக்காக மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நிதி உதவி பெற நிதியுதவி வழங்கும் திட்டம் தான் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் (PMMVY). இந்த திட்டத்தின் மூலம் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ரூ.5,000 நிதியுதவியாக வழங்கப்படுகிறது. தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் .மு.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ருவந்தனா யோஜனா” PMMVY திட்டத்தின் கீழ் பயன்பெறும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ரூ.5000 நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

விளம்பரம்

இந்த உதவித்தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் அருகில் உள்ள அஞ்சலகங்கள் அல்லது தபால்காரர் கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்கி பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் வரும் சுகாதாரத் துறையிலிருந்து பெறப்பட்ட தகவலின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் 2,500 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுள்ளவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணைபயன்படுத்தி E-kyc (விரல் ரேகை மூலம) ஒரு சில நிமிடங்களில் இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கமுடியும்.

இதற்காக சமூக நலத்துறையுடன் இணைந்து நகரங்களில் / கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அஞ்சலகங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அல்லது தபால்காரர்/ கிராமஅஞ்சல் ஊழியரை அணுகி இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிகணக்கு துவங்கி பயன்பெறுமாறு அஞ்சல் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

• தூத்துக்குடி டைம்ஸ் • வாட்ஸ்அப்!
 https://chat.whatsapp.com/FWHq80qx4i9GGNt1m3ORk9