குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அறங்காவலர்கள் தேர்வு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அறங்காவலர்களாக கண்ணன், ரவீந்திரன் குமரன், கணேசன் மகாராஜன், வெங்கடேஸ்வரி ஆகியோர் பதவியேற்றனர்.

இந்து சமய அறநிலைத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில் அறங்காவலர் குழு தலைவராக கண்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதில் கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் ஆய்வாளர் பகவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.