குலசை தசராக் குழுக்களுக்கு தற்காலிக மின்இணைப்பு!

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி,பக்தர்கள் காப்பு கட்டி ஒவ்வொரு ஊரிலும் தசராக் குழுக்கள் அமைத்து அம்மனை தினமும் தரிசனம் செய்து வருவார்கள். அந்த தசராக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு தற்காலிக மின்இணைப்பு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்செந்தூா் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி, திருச்செந்தூா் கோட்ட பகுதிகளில் தசரா பந்தலுக்கு தேவையான விளக்குகள், தெருக்களில் அலங்கார விளக்குகள், தற்காலிக கடைகள் அமைக்க மின் இணைப்பு பெற இணையதளம் மூலம் பதிவு செய்து தங்கள் பிரிவிற்குள்பட்ட அலுவலகத்தில் சமா்ப்பித்தால் உடனடியாக மின் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள், பக்தா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

மேலும் விவரங்களுக்கு பின்வரும் உதவிப் பொறியாளா்கள் கைப்பேசி எண்களான திருச்செந்தூா் – 9445854802, காயாமொழி – 9445854805, பரமன்குறிச்சி – 9445854806, காயல்பட்டினம் – 9445854810, ஆறுமுகனேரி – 9445854808, குரும்பூா் – 9445854809, சாத்தான்குளம் (நகா் ) – 9445854812, சாத்தான்குளம் (கிராமம்) – 9445854716, பழனியப்பபுரம் – 9445854813, நாசரேத் – 9445854815, ஆழ்வாா் திருநகரி – 9445854817, மெஞ்ஞானபுரம் – 9445854816, உடன்குடி (நகா்) – 9445854820, உடன்குடி (கிராமம்)- 9445854821, படுக்கப்பத்து – 9445854822, நடுவக்குறிச்சி – 9445854823 ஆகியவற்றில் தொடா்புகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.