விண்ணவரம் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

குலசேகரன்பட்டினம் விண்ணவரம் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் விண்ணவரம் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு முதல் நாள் இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜையும், பகல் 12 மணிக்கு கிருஷ்ணன் பிறப்பு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது
இரண்டாவது நாள் இரவு 7 மணிக்கு சிறுவர்கள் கண்ணன், ராதை வேடமிட்டு கோலாட்டம் ஆடினர். இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜையும் தொடர்ந்து உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இரவு 8. 30 மணிக்கு சுவாமி சப்பர பவனி நடந்தது. இதில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் சொர்ணபிரியாதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.