கேரளாவில் நிஃபா வைரஸ் இருவர் உயிரிழப்பு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நிஃபா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நடத்தியுள்ளார்.
உயிரிழந்த இருவரின் மாதிரிகளை புனேவில் சோதனை செய்ததில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். நிஃபா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.