ரூ.19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய கனிமொழி எம்.பி.,

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி அருகேயுள்ள சன்னதிபுதுக்குடி, சவலாப்பேரி, ஆசூர், சிவஞானபுரம் மற்றும் காப்புலிங்கம்பட்டி உள்ளிட்ட பொது மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்கும் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி. தமிழக சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்,மேயர் ஜெகன் பெரியசாமி  மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளட்டோர் கலந்து கொண்டனர். மக்களின் குறைகள், தேவைகள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் மனுக்களை பெற்றுக்கொண்ட கனிமொழி எம்.பி சுமார் 19லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.