திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கிவரும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன்தொடங்கியது. யாகசாலை பூஜை தொடங்கியதும் பக்தர்கள் பச்சை ஆடை உடுத்தி தங்களது விரதத்தை தொடங்கினார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் கோவிலில் அங்கங்கே அமர்ந்து கந்த சஷ்டி கவசம் முருகனின் பாடல்களையும் பாடி விரதம் இருக்க தொடங்கினார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு 18 இடங்களில் சுமார் 2லட்சம் சதுர அடி பரப்பளவில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து உச்சிகால அபிஷேகம் மாலை  சாய் ரட்ச தீபாராதனை நடைபெறும்.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஆறாம் திருநாளானான வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.