தூத்துக்குடியில் அக்.,18ல் காளி வேட ஊர்வலம்!

தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம் வரும் அக்.18ம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ஒருங்கிணைப்பாளர் தா.வசந்தகுமார் வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாநகரில் வருடம் தோறும் நடைபெறும் குலசை முத்தாரம்மன் பக்தர்களின் காளி ஊர்வலம், இந்த ஆண்டு வரும் 18ம் தேதி புதன் கிழமை அன்று மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் ஆலயத்தில் இருந்து சிவன் கோவில் வரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஆன்மீகப் பெரியவர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.