கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – ஒருநாள் முன்னதாகவே ₹1,000 வரவு வைக்கப்படும்!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு, இம்மாதம் ஒருநாள் முன்னதாகவே வங்கிக்கணக்கில் ₹1,000 வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற தகுதி பெற்றவர்களுக்கு கடந்த மாதம் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி,முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 உரிமை தொகை செலுத்தப்பட்டுள்ளது. தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், இந்த மாதம் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், ஒருநாள் முன்கூட்டியே பயனாளர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி, வரும் 14-ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.