கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான உதவி மையங்கள் செயல்பட தொடங்கியது!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்திருந்த 56.60 லட்சம் பேருக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கான உதவி மையங்கள் இன்று முதல் செயல்பட துவங்கியது.

  • சென்னை மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களிலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது,, மீண்டும் விண்ணப்பங்கள் பதிவு செய்வது, ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் வங்கி கணக்குக்கு உரிமைத் தொகை வராமல் இருப்பது உட்பட எந்த சந்தேகங்கள் குறைகள் இருந்தாலும் பொதுமக்கள் உதவி மையத்தை அணுகி தீர்வு காணலாம்.
  • நிராகரிப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட பின், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.